பிரமோற்சவம் முடிந்த நிலையில் திருப்பதியில் 4 மணிநேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: பிரமோற்சவம் முடிந்த நிலையில் திருப்பதியில் 4 மணிநேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 9 நாட்களாக நடைபெற்ற பிரமோற்சவம் நேற்று முன்தினம் இரவு கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. இந்த பிரமோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 55 ஆயிரத்து 747 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21 ஆயிரத்து 774 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.11 கோடி காணிக்கையாக கிடைத்தது.

நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

The post பிரமோற்சவம் முடிந்த நிலையில் திருப்பதியில் 4 மணிநேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: