ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 1 வரை 167 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் செய்முறை பயிற்சி முகாம்

தஞ்சாவூர், செப். 27: தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் இப்பயிற்சி நடைபெற்றது. தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, அவரது குழுவினர் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை ஆகியவற்றை கொண்டு ஓவியத்துக்கான பலகை தயாரிக்கும் பணி, தேவையான வரைபடத்தை உருவாக்குதல், வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது, தங்க இதழ் பதித்தல், வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் ஆகியவற்றை செய்து காண்பித்தனர்.

முன்னதாக பயிற்சியை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குநர் பத்மாவதி தொடங்கி வைத்தார். சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

The post ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 1 வரை 167 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் செய்முறை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: