திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக சமூக ஊடக பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது

திண்டிவனம், ஜன. 12: திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக சமூக ஊடக பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாமக சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நேற்று ராமதாஸ் தலைமையில் நடந்தது.

இதில் சமூக வலைதளங்களில் பாமகவை விமர்சனம் செய்பவர்களுக்கு எவ்வாறு பதில் அளிப்பது, வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ராமதாஸ் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:

கே: யாருடன் கூட்டணி? அதுகுறித்து என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?

பதில்: கூட்டணி குறித்து பேசி கொண்டிருக்கிறோம்.

கே: சென்னை பயணம் எதற்கு?

பதில்: நான் சென்னைக்கு போகக்கூடாதா? நூறு வேலை இருக்கும். அதற்காக நான் செல்வேன். அதுபற்றி உங்களிடம் சொல்ல தேவையில்லை.

கே: பாஜ பேச்சுவார்த்தை நடத்தியதா?

பதில்: இதுவரை பேசவில்லை. அமைதியாக, நல்லபடியாக தேர்தல் நடக்க வேண்டும்.

கே: திமுக கூட்டணி பேசியதா?

பதில்: யாரும் பேசவில்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

Related Stories: