நாகை மாவட்டத்தில் நாளை, அக்.2ல் டாஸ்மாக் விடுமுறை

நாகப்பட்டினம்,செப்.27: ‘‘மிலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூட வேண்டும்,’’ என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது:
நபிகள் நாயகம் பிறந்த நாளான நாளை (28ம் தேதி) மற்றும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக்கடையை மூடிட வேண்டும். தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகளின் படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதியின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நாகை மாவட்டத்தில் நாளை, அக்.2ல் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: