ஸ்ரீபெரும்புதூர்: சுகம்தரும்மேடு அரசு பள்ளியில் ரூ.27.59 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சுகம்தரும்மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுகம்தெரும்பேடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.27.59 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு நேற்று நடைபெற்றது.
சுகம்தரும்மேடு அரசு பள்ளியில் ரூ.27.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காயத்ரி சசிகுமார், வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post சுகம்தரும்மேடு அரசு பள்ளிக்கு ரூ.27.59 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
