கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வீரவநல்லூர், செப்.26: கன்னடியன் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். கன்னடியன் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்.11, 12, 13 ஆகிய தேதிகளில் சேரன்மகாதேவி நீர்வளத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில் வீரவநல்லூர் பகுதிக்கு ஆனந்தராஜ் என்பவரும், காருகுறிச்சி பகுதிக்கு பரமசிவன், சேரன்மகாதேவி பகுதிக்கு முருகன், பத்தமடை பகுதிக்கு சிங்கராஜா, கோபாலசமுத்திரம் பகுதிக்கு சுரேஷ் செல்வகுமார், பிராஞ்சேரி பகுதிக்கு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் சேரன்மகாதேவி நீர்வளத்துறை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். இதில் உதவிப் பொறியாளர்கள் ஜெயகணேசன், மகேஷ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: