ராமநாதபுரம், செப்.26: ராமநாதபுரம் மாவட்டம்,பெரியபட்டிணம் பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தொகுதி மேம்பாட்டின் நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி, திமுக திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் வருசை முகமது, சாயல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தார்,
திமுக கிளைச் செயலாளர் அன்சாரி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், அப்பாஸ், நவ்பர், கிளைச் செயலாளர் கருப்பையா, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் ரியாஸ் கான், முஸ்லிம் லீக் மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், ராமநாதபுரம் நகர தலைவர் முகம்மது காசிம், ஆண்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் அன்சார் அலி, அப்துல் மஜீத் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், பெரியபட்டிணம் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post பெரியபட்டிணத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய நிழற்குடை appeared first on Dinakaran.