திருச்செந்தூர் தொகுதி ஆபீசில் இலவச இ சேவை மையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்

உடன்குடி,செப்.25: திருச்செந்தூரில் உள்ள தனது தொகுதி அலுவலகத்தில் இ சேவை மையத்தை திறந்துவைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதன் சேவையை துவக்கிவைத்தார். பொதுமக்கள் நலன்கருதி திருச்செந்தூரில் செயல்படும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலவச இ சேவை மையத்தின் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இ சேவை மையத்தை திறந்துவைத்து அதன் சேவையைத் துவக்கிவைத்தார்.

விழாவுக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்எல்ஏ, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், துணை தாசில்தார்கள் தங்கமாரியப்பன், சங்கரநாராயணன், வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், அரசு வக்கீல் சாத்ராக், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராமஜெயம், மீனவர் அணி தர் ரொட்ரிகோ, சாரதா பொன் இசக்கி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஒன்றியச் செயலாளர்கள் ஆழ்வை கிழக்கு நவீன்குமார், உடன்குடி கிழக்கு இளங்கோ, சதீஸ்குமார், இசக்கிபாண்டியன், கொம்பையா, சுப்பிரமணியன், ஜெயக்கொடி, ஒன்றிய பொருளாளர் பரிசமுத்து, எம்எல்ஏ அலுவலகப் பொறுப்பாளர் அக்னல், நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post திருச்செந்தூர் தொகுதி ஆபீசில் இலவச இ சேவை மையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: