கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில கால்பந்தாட்ட போட்டியில் திருச்சி அணி முதலிடம் பிடித்தது

திருத்துறைப்பூண்டி, செப். 25: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் நடந்த 2 நாள் மாநில கால்பந்தாட்ட போட்டியில், திருச்சி அணி முதலிடம் பிடித்தது. கூத்தாநல்லூருக்கு 2 வது இடம் கிடைத்தது. திருத்துறைப்பூண்டி நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரண்டு நாள் கால்பந்து போட்டி யுனைடெட் ஸ்போர்ட்ஸ் டர்ப் புல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், ராமநாதபுரம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

போட்டி நடுவர்களாக கிருஷ்ணகுமார், சந்துரு, பாஸ்கர் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் முதல் இடம் பிடித்த திருச்சி அணிக்கு ரூ.20 ஆயிரம், 2வது இடம் பிடித்த கூத்தாநல்லூர் அணிக்கு ரூ.15 ஆயிரம், 3ம் இடம் பிடித்த நாகூர் அணிக்கு ரூ.10 ஆயிரம், 4ம் இடம் பிடித்த அதிராம்பட்டினம் அணிக்கு ரூ.7,500 மற்றும் மெடல் சுழற்கோப்பைகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இளையராஜா ஆகியோர் வழங்கி பேசினார்கள்.

இதில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பனங்குடி குமார், துணை அமைப்பாளர்கள் . வினோத்குமார், எடிசன், எழிலரசன், கல்யாணசுந்தரம், முருகானந்தம், தாஹீர் அலி மற்றும் மாவட்ட நகர வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியயை ஸ்வாட் கால்பந்து கழகம் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திமுக நகர நிர்வாகிகள் மற்றும் நகர இளைஞரணி அமைப்பாளர் வசந்த் துணை அமைப்பாளர்கள் குமரன், கமல் கார்த்தி, கோபி ஏற்பாடு செய்து இருந்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில கால்பந்தாட்ட போட்டியில் திருச்சி அணி முதலிடம் பிடித்தது appeared first on Dinakaran.

Related Stories: