ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நடவு கல்லணை கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர், செப். 25: கல்லணையிலிருந்து கல்லணை கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றது. அணையின் நீர் இருப்பு குறைந்த காரணத்தால் முறை பாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லணை கால்வாய் பகுதிகளுக்கு நீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் முறை பாசனத்தின்படி இன்று (செப்.25ம் தேதி) முதல் கல்லணை கால்வாயில் நீர் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கிடையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று கல்லணை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் பவழக்கண்ணன், உதவி செயற் பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், மணிகண்டன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரியபிரகாஷ், நிஷாந்த், அறிவரசு ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் ஒரே நேரத்தில் 2,500 மரக்கன்றுகள் நடவு கல்லணை கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: