திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

தர்மபுரி, செப்.25: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், காரிமங்கலத்தில் நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்காக காரிமங்கலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக நடைபெறும் இந்த பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்ரமணி ஆகியோர், நேற்று இரவு கூட்ட மேடை மற்றும் இளைஞர் அணியினர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது, முன்னாள் எம்பி எம்ஜி சேகர், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பேரூராட்சி தலைவர் மனோகரன், பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுரு, கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபால், அன்பழகன், சந்திரமோகன், முனியப்பன், பொருளாளர் மாரவாடி முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், அணிகள் அமைப்பாளர்கள் குமரவேல், சண்முகம், ஜெயா, கண்ணபெருமாள், குமார், புல்லட் துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: