பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்திய ராணுவத்தை சேர்ந்த 350 வீரர்கள் அடங்கிய குழு நேற்று சென்றடைந்தனர்’’ என்றனர். இதுகுறித்து கடற்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில்,‘‘ இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் 4 நாள் பயணமாக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சுற்றுபயணத்தின்போது.இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டன.
இதற்கிடையே ரோட் தீவில் அமெரிக்க கடற்படை கல்லூரியில் சர்வதேச கடற்படை கருத்தரங்கம் நடந்தது. ஒத்த கருத்து உடைய நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கம். கருத்தரங்கின் பின்னணியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, பிஜி,இஸ்ரேல், இத்தாலி,ஜப்பான், கென்யா,பெரு, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தினார். அமெரிக்க கடற்படை தளபதியுடன் நடந்த பேச்சின்போது, மலபார், சீ டிராகன், ரிம்பக், டைகர் டிரையம்ப் போன்ற கூட்டு பயிற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்’’ என்றார்.
The post இந்தியா-அமெரிக்கா இன்று கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.