சோழிங்கநல்லூர், செப்.25: நேற்று முன்தினம் மாலை இருவர் பழவேற்காடு பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அங்குள்ள ஏரியில் படகு சவாரிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், போதையில் இருவரும் தடையை மீறி படகில் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து திரும்பியபோது ஏரியில் அருண் தவறி விழுந்துள்ளார். இவர் தொழிலதிபராவார். அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அருண் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அருணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். பல உயிர்ச் சேதங்கள் நடப்பதால்தான் பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் அதைமீறி படகோட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்து என்று தெரிந்தும் படகு சவாரி செல்வது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தடையை மீறி படகு சவாரி ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி appeared first on Dinakaran.
