பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (சனி) தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது. 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
The post ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் டேபிள் டென்னிசில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.
