வேப்பலோடையில் பனை மர விதை வங்கி தொடக்கம்

குளத்தூர், செப். 23: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கிழக்கு கடற்கரை கிராமங்களில் 1 கோடி பனை விதை நடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு போன்ற 1000க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் வருகிற அக்.1ம் தேதி தொடங்குகின்றன. இத்திட்டத்திற்கான துவக்க விழாவில் 15 லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் வகையில் பனை விதைகளை சேகரிக்கும் பணிகளை பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆலோசனைப்படி குளத்தூர், வேப்பலோடை, கு.சுப்பிரமணியபுரம், தருவைகுளம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு வேப்பலோடை பஞ்சாயத்தில் பனை விதை வங்கி துவக்க விழா நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட கீரின் கமிட்டி உறுப்பினர் தாமோதரன், வேப்பலோடை பஞ். தலைவர் வேல்கனி ஆகியோர் தலைமையில் விதை வங்கி துவக்கப்பட்டு தன்னார்வலர்களிடம் இருந்து பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.

The post வேப்பலோடையில் பனை மர விதை வங்கி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: