கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பினர் தர்ணா

தஞ்சாவூர், செப்.22: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தஞ்சாவூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும். இ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் செயலாளர்கள் காணிக்கைராஜ், கலைசெல்வன், ராஜேந்திரன், தலைவர்கள் அதிதூத மைக்கேல்ராஜ், வெற்றிவேல், சகாயராஜ், பொருளாளர்கள் சங்கர், கண்ணன், முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி, பொறியாளர் அமைப்பு மாநில பொதுச்செயலாளர் அருள் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பினர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: