Food spot

கியூப் குரோசண்ட்

பல நாடுகளில் குரோசண்ட் பிரபலம் அடைந்திருந்தாலும் சென்னைக்கு இது புதுவரவுதான். அதுவும் கியூப் குரோசண்ட் சென்னைக்கு வந்திருப்பது ஸ்பெஷல் நியூஸ். ஏனெனில், இப்போது லண்டனில் பிரபலமடைந்த கேக் வகைகளில் கியூப் குரோசண்ட் முதன்மையாக இருக்கிறது. அதை சென்னைக்கு கொண்டுவந்திருப்பது ஃபுட்டீகளுக்கு கொண்டாட்டம்தான். இந்த கியூப் குரோசண்டில் பல வெரைட்டிகள் இருந்தாலும் ப்ளூ பெர்ரி சாஸில் தயார் செய்கிற குரோசண்டிற்கு மவுசு அதிகம். சாப்பிடும்போதே சாஸின் சுவையும், குரோசண்டின் சுவையும் சேர்த்து நம்மை லண்டனுக்கு கூட்டிச் சென்றுவிடும். அந்தளவு ஸ்பெஷலான இந்த கியூப் குரோசண்டை சாப்பிட வேண்டுமென்றால் அடையாரில் உள்ள ஈஸ்ட் கிரோவ் ரெஸ்டாரென்ட் நல்ல சாய்ஸ்.

5 in 1 டோர்ட் கேக்

நார்மலான கேக்கை சாப்பிடவே நமக்கு நாவூறும். இதில் ஐந்து வகையான ப்ளேவர்களைச் சேர்த்து, ஒரே கேக்காக தயாரித்து 5 in 1 டோர்ட் கேக் என்று விற்பனை செய்கிறார்கள். இந்த கேக் கேரளாவில் பிரபலமடைந்த நிலையில் இப்போது சென்னையிலும் கொண்டுவந்திருக்கிறார்கள். மில்க் சாக்லேட், டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் ஆகியவற்றை சேர்த்து, அதன்கீழ் வெளிநாட்டு சாக்லேட் வகைகளை சேர்த்து, மேலே கோகோ பவுடர் தூவி பிரீசரில் வைத்து தருவார்கள். சாப்பிடுவதற்கு ஐஸ்கிரீம் போலவும், கிரீம் சாக்லேட் போலவும் இருக்கும். அதே நேரத்தில் சுவையும் அள்ளும். இந்த கேக்கை சாப்பிடுவதற்கு பல ஃபுட்டீக்கள் போட்டி போட்டுக்கொண்டு முந்துகிறார்கள். இதை சென்னையில் சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் அண்ணா நகரில் உள்ள ட்ரீம் கேக் சென்டர் நல்ல சாய்ஸ்.

கேசர் பிஸ்தா பாதாம் மில்க்

பாதாம் மில்க் என்றால் எப்போதும் அனைவரின் மத்தியிலும் ஸ்பெஷல் வரவேற்பு இருக்கிறது. அதிலும் கேசர் பிஸ்தா மிக்ஸ்டு பாதாம் மில்க் என்றால் சொல்லவா வேண்டும்! பெரும்பாலும் கல்யாண விருந்து பட்டியலில் முதன்மையான இனிப்பாக இது இருக்கும். அப்படி இல்லையென்றாலும் பல ஸ்டார் ஹோட்டலில் வெல்கம் ட்ரிங்காக இது இருக்கும். இந்த இரண்டு இடத்தில் சாப்பிடவில்லை என்றாலும் கவலையில்லை. ஏனென்றால், நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்பேஸ்தான் என்ற ரெஸ்டாரென்டில் இது கிடைக்கிறது. மற்ற இடத்தில் கிடைக்கும் பாதாம் மில்க் போல் இல்லாமல் குங்குமப்பூ எல்லாம் சேர்த்து மேலே பாதாமை தூவி தருகிறார்கள்.

The post Food spot appeared first on Dinakaran.

Related Stories: