மூணாறில் ஆக்கிரமிப்புக்குள்ளான அரசு நிலம் மீட்பு

மூணாறு, செப். 21: கேரளா மாநிலம் மூணாறு ஊராட்சிக்கு உட்பட்ட இக்கா நகரில் 20 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி மற்றும் வருவாய் துறையின் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டும் பணி நடந்தது.இதை அறிந்த ஊராட்சி அதிகாரிகள் கட்டுமான பணிகளை தடை செய்தனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் கூடுதல் தொழிலாளர்களை பயன்படுத்தி கான்கிரீட் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்தன. இதையடுத்து ஊராட்சி செயலாளர் சஹஜன் போலீசார் உதவியுடன் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி நிலத்தை கையகப்படுத்தினார். மேலும் அந்த இடத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகையும் வைத்தார்.இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மூணாறில் ஆக்கிரமிப்புக்குள்ளான அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: