அஞ்சல் கோட்டத்தில் மக்கள் குறை தீர் கூட்டம்

தர்மபுரி, செப்.21: தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம்தேதி காலை 11 மணியளவில் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். நுகர்வோர் தங்கள் அஞ்சல் துறை சார்ந்த குறை ஏதேனும் இருந்தால், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நுகர்வோர் தங்கள் மனு சார்ந்த அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிடவும். கடிதத்தின் மேல் ‘தர்மபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்’ என்று குறிப்பிட வேண்டும். தங்கள் மனு இவ்வலுவலகத்தை வந்தடைய வேண்டிய கடைசி நாள், வரும் 26ம்தேதி ஆகும். இத்தகவலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post அஞ்சல் கோட்டத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: