இதேபோல், சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சரவணம்பட்டி போலீசார் நேற்று சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள், கோவை காளப்பட்டி ரோடு ரைஸ்மில் தெருவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்தனன் (21), காளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த கோகுல் மனைவி பிஎஸ்சி ஐடி., பட்டதாரி லோகேஷ்வரி (23), சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த பிஎஸ்சி., பட்டதாரி ஆசினா (21), கோவில்பாளையத்தை சேர்ந்த பி.காம்., பட்டதாரி சந்தியா (20) ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் முதல் முறையாக பட்டதாரி இளம்பெண்கள் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கோவையில் கஞ்சா விற்ற பட்டதாரி இளம்பெண்கள்: கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது; 2.3 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.
