பகுதி சபா கூட்டம்

பாலக்கோடு, செப்.17: மாரண்டஅள்ளி பேரூராட்சி 5வது வார்டு கோட்டைமேட்டு தெரு, சத்திரம் தெரு, வெள்ளிச்சந்தை சாலை பகுதிகள் அடங்கிய பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் மேலும் தேவையான வசதிகளை மனுக்கள் பெற்று போர்கால அடிப்படையில் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தார். முதலில் பகுதி சபா கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் லட்சுமி முனிராஜ், இளநிலை உதவியாளர் தங்கராஜ், வரி தன்டலர் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பகுதி சபா கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: