வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள பேரிடர் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

 

மன்னார்குடி, செப். 16: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் மன்னார்குடி அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரி யில் தீயணைப்புத் துறையினர் போலி பேரிடர் தடுப்பு ஒத்திகை ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு மழைவெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடர் இருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக அவர்க ளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொ ட்டி பேரிடர் தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, தீயணைப்பு மீட்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை கால பேரிடர் மீட்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட உதவி அலுவலர் இளஞ் செழியன் தலைமையில் மன்னார்குடி அடுத்த குமரபுரம் சதாசிவம் கதிர்காம பள்ளி மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. ஒத்திகை நிகழ்ச்சியில், மன்னார்குடி நிலைய அலுவலர் சீனிவாசன் முன்னி லையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று மழை வெள்ள காலங்களில் நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை படகுமூலம் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படும்போது கிடைக்கின்ற பொருட்க ளான மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தகரப் பெட்டிகள் ஆகியவற் றை கொண்டு வெள்ளை நீரில் எவ்வாறு தப்பித்து கரை ஏறுவது, புயல் காரணமாக சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை எவ்வாறு அகற்றுவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். இதில் திரளான கல் லூரி மாணவிகள் பங்கேற்று தீயணைப்பு வீரர்களின் பணிகளை பாராட்டினர்.

The post வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள பேரிடர் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: