ஒன்றிய அரசை கண்டித்து கறம்பக்குடியில் இந்திய கம்யூ. கட்சி சாலை மறியல் 19 பெண்கள் உள்ளிட்ட 56 பேர் கைது

கறம்பக்குடி, செப். 14: ஒன்றிய அரசை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கறம்பக்குடி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டத்தில் கருப்பு பணத்தை மீட்டு, குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று கூறி தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னாச்சு என்பதையும், காஸ் சிலிண்டர் விலையை இருமடங்காக உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் திருஞானம் மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை அனைவரையும் விடுவித்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கறம்பக்குடியில் இந்திய கம்யூ. கட்சி சாலை மறியல் 19 பெண்கள் உள்ளிட்ட 56 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: