இந்து மத கோத்ரம் வழக்கப்படி காந்தி வராது ராகுலின் குடும்பப்பெயராக பெரோஸ் இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இதுபற்றி கூறியதாவது: இந்து மதத்தில் உள்ள கோத்ரம் முறையின்படி காங்கிரஸ் எம்பி ராகுலின் குடும்ப பெயர் காந்தி கிடையாது. அவர் அதை பயன்படுத்தக்கூடாது. அவரது குடும்பப்பெயராக பெரோஸ் என்று பயன்படுத்த வேண்டும். எங்கள் கலாச்சாரத்தில், ஒருவரின் தர்மம் தந்தையின் தர்மத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. ஒருவரின் கோத்ரம் தந்தையின் கோத்திரத்தின் அடிப்படையில் கருதப்படுகிறது. ஆனால் நேரு குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாது. சில சமயங்களில் தாயின் கோத்ரமும், சில சமயங்களில் தந்தையின் கோத்திரமும் ஏற்றுக் கொள்ளப்படும்.

பிறகு இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன புரியும். கோத்ரம் முறையைப் பின்பற்றியிருந்தால், காந்தியை தனது குடும்பப் பெயராக ராகுல் வைத்திருக்க மாட்டார். அவர் காந்தி என்று தன் குடும்பப்பெயராக எழுதிக் கொண்டிருக்க மாட்டார். பெரோஸ் என்று தன் குடும்பப்பெயராக எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய தந்தைவழி தாத்தா பெரோஸ். இப்போது நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சொல்லுங்கள். நீங்கள் இந்துவா, பார்சியா அல்லது கிறிஸ்தவரா என்று மக்களிடம் சொல்லுங்கள் என்றார்.

The post இந்து மத கோத்ரம் வழக்கப்படி காந்தி வராது ராகுலின் குடும்பப்பெயராக பெரோஸ் இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: