முதல் நான்கு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அண்ணியில் ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணி: பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பதிரனா உள்ளிட்டோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், இந்திய அணி 109-3 (20.4), ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோழி, வெளியேறினார். களத்தில் கே எல் ராகுல்-8, இஷான் கிஷன்-12 அடிவருகின்றனர்.
The post ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு! appeared first on Dinakaran.
