தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அறிவித்த முதல்வருக்கு நன்றி

தஞ்சாவூர், செப்.12: தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.தியாகி இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகிலன் தலைமை வகித்தார். விடுதலை தமிழ்ப்புலிகள் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, ஆதித்தமிழர் பேரவை கட்சியின் மூத்த தலைவர் நாத்திகன், இளைஞர் அணி தலைவர் பிரேம்குமார், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், மார்க்ஸ் பெரியார் படிப்பு வட்ட நிறுவனர் லூர்துசாமி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாநகர செயலாளர் அண்ணாதுரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட தலைவர் சுரேஷ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், விடுதலை தமிழ்ப்புலி கட்சியின் மாநில செயலாளர் போராளி, மாநிலத் துணை பொது செயலாளர் தளபதி சுரேஷ், மாவட்ட தலைவர் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் மாநகராட்சி இடத்தில் ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்படும் என்ற அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நன்றியை தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சென்னை தலைநகரில் மெரினாவில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்நாடு அரசுக்கு வைக்கப்பட்டது.

The post தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அறிவித்த முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: