நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (38). மீனவரான இவர், இப்பகுதியில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவரது அண்ணன் பீட்டர் (48). நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சகோதரர்களான பீட்டர், பாஸ்கர் இருவரது வீட்டு வாசல்களிலும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் வீட்டிலிருந்த மீன்பிடி வலைகள் முழுவதும் சேதமடைந்தன. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: