பிஆர்எஸ் எம்எல்ஏ வெற்றி செல்லாது தெலங்கானா ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை

புதுடெல்லி: தெலங்கானாவில் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பில் கட்வால் தொகுதியில் போட்டியிட்ட பண்ட்லா கிருஷ்ணா வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.அருணா 2ம் இடத்துடன் தோல்வி அடைந்தார். அதன்பின் அருணா, பாஜவில் இணைந்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்தமான சொத்துக்களை பண்ட்லா கிருஷ்ணா மறைத்ததாக அருணா தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், பண்ட்லா கிருஷ்ணா வெற்றி செல்லாது எனவும், 2018 டிசம்பரில் இருந்து அருணா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து பண்ட்லா கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெலங்கானா உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து, 4 வாரத்தில் அருணா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

The post பிஆர்எஸ் எம்எல்ஏ வெற்றி செல்லாது தெலங்கானா ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: