அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் அஸ்வின் தலைமையில் நேற்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக, திருவேற்காடு போலீசார் கோயில் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பாஜவினரின் முற்றுகைப் போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பாஜவினரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
The post திருவேற்காட்டில் பரபரப்பு தேவி கருமாரியம்மன் கோயில் அலுவலகம் முற்றுகை: போலீசாருடன் தள்ளுமுள்ளு, பாஜவினர் கைது appeared first on Dinakaran.
