கலெக்டர் தகவல் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்தது பாலாம்பிகை வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

 

தஞ்சாவூர், செப். 11: பாலாம்பிகை சமேத அரு.பூமாலை வைத்யநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமானபாலாம்பிகை சமேத பூமாலை வைத்யநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. நேற்று நான்காம்கால யாகபூஜை பூராணகதியுடன் நிறைவுப்பெற்றது.

இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவகனங்கள் இசையுடன் வழி நெடுக பூக்கள்தூவ புனிதநீர் கடத்தை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு கொண்டு வந்தனர். மூலவர் மற்றும் பரிகார தெய்வங்கள் கோபுரகலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கலசத்தில் புனிதநீரை ஊற்றினர். ஏராளமான மக்கள கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் தகவல் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்தது பாலாம்பிகை வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: