அறிவியல் இயக்க கிளை மாநாடு

காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு நடந்தது. கிளை செயலாளர் பிரபு வரவேற்றார். கிளைத்தலைவர் ராம்மோகன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி கருத்துரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் ரகுநாதன், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், அறிவொளி இயக்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தாமரை, தலைமையாசிரியர் ஆல்பர்ட், வெற்றிச்செல்வன், சந்தனமேரி, ஆசிரியர்கள் கண்ணதாசன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லல் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவராக ராம்மோகன், கிளைச் செயலாளராக நாகரத்தினம், கிளை பொருளாளராக சந்திவேல் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

The post அறிவியல் இயக்க கிளை மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: