நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமனம் அலெக்ஸ் அப்பாவு முதல்வரிடம் வாழ்த்து

பணகுடி,செப்.7: நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அலெக்ஸ் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநில விஷு அமைப்பில் செயலாளராக இருப்பவர் அலெக்ஸ் அப்பாவு. இவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மாணவர் அமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூக பணிகளை செய்து வருகிறார். அலெக்ஸ் அப்பாவுவை திமுக நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமனம் செய்து மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அலெக்ஸ் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமனம் அலெக்ஸ் அப்பாவு முதல்வரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: