கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

*தேயிலையை காதில் மாட்டியும், கைகளில் ஏந்தியும் வலியுறுத்தல்

கோத்தகிரி : கோத்தகிரியில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரியும்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரியும் தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலைகளை காதில் மாட்டி கொண்டும், கைகளில் ஏந்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரியும்,
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் உள்ளதால் தற்போது விவசாயிகள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளானதாகவும் தெரிவித்து, நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக்கோரி கடந்த 1ம் தேதி முதல் கோத்தகிரி அருகேயுள்ள நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 5வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு, பொரங்காடு சீமை படுகர் நல சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை பெத்தளா ஊர் தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேயிலை இலைகளை காதில் மாட்டி கொண்டும், கைகளில் ஏந்தியும், படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் பாடல்களை பாடியும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் போராட்டத்தை நடத்தினர். மேலும், நட்டக்கல் பகுதியில் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி கிராமங்களை சேர்ந்த தேயிலை விவசாயிகள் இலை பறிக்க செல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: