பூண்டி வட்டார விவசாயிகளுக்கு வேண்டுகோள்

திருவள்ளூர்: பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பூண்டி வட்டார விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள்: வருகின்ற நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்யவும், போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நெல் பயிருக்கு மேலுரம் இடல் மற்றும் இதர விவசாய பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்….

The post பூண்டி வட்டார விவசாயிகளுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: