பிளஸ் 2 மறு கூட்டல் முடிவு வெளியீடு

சிவகாசி, செப். 5: பிளஸ்1 , பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2023, ஜூன்/ஜூலையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது புதிய பதிவெண் பட்டியல் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து புதிய திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 மறு கூட்டல் முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: