வலங்கைமான் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வலங்கைமான், செப். 5: வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோவில் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சி ஆண்டாங்கோவில் மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாசனம், கிராம சங்கல்பம், கணபதி ஹோமம், தன பூஜை, மகா ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்நது அம்பாளுக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை சிவ உண்ணபுரீஸ்வர் சிவாச்சாரியார், சுப்பிரமணிய சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் ரவி பூசாரி உள்ளிட்டோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர், ஆண்டான்கோவில் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post வலங்கைமான் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: