நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

புளியங்குடி, செப்.2: புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவர் 308வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன், மாநில நிர்வாகிகள் தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா, சுதா பரமசிவன், இசக்கி சுப்பையா எம்எல்ஏ, பாப்புலர் முத்தையா, நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தென் மண்டல அமைப்புச்செயலாளர் மாணிக்கராஜா, நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வர்த்தக அணி செயலாளர் அரியகுளம் மந்திரமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திர மூர்த்தி, முருகையா பாண்டியன், இணை செயலாளர் சுமதி கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கிருஷ்ணசாமி, பேரூர் செயலாளர் துரைப்பாண்டியன், மாரியப்பன் அம்மா தாசன், நிர்வாகிகள் கற்பகம் குருநாதன் மற்றும் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: