கள்ளக்காதல் விவகாரத்தில் வேன் டிரைவர் படுகொலை: போலீசார் விசாரணை

திருக்கழுக்குன்றம், செப்.2: திருக்கழுக்குன்றம் அருகே, காதல் விவகாரத்தில் வேன் டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகணக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (43). இவர், சொந்தமாக வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் வனப்பகுதி அருகே கண்ணன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள், திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், அவர் படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், இறந்துப்போன கண்ணனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனால் அடிக்கடி இரு வீட்டாருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்ததும், நேற்று முன்தினம் அவர்களிடையே சண்டை ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில், கண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணனை கொலை செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் போலீசார், முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், அந்த கள்ளக்காதலியின் உறவினர்கள் 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்காதல் விவகாரத்தில் வேன் டிரைவர் படுகொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: