மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்தால் சமையல் சிலிண்டரின் விலை ரூ.2000 ஆகலாம்:சீமான்

தாராபுரம்: ‘மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்தால் சமையல் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார். தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய் விலை குறைத்து இருப்பதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. இதை ஏன் முன்கூட்டியே செய்திருக்கக்கூடாது?.

வடமாநிலங்களில் ஐந்து இடங்களில் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த விலை குறைப்பு. தேர்தல் முடிந்ததும் ஒரு வேலை மீண்டும் மத்தியில் பாஜ ஆட்சியைப் பிடித்தால் சிலிண்டரின் விலை 2000 ரூபாய் என உயர்த்தப்பட்டாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.சரி சிலிண்டர் விலையை குறைத்தீர்கள் அல்லவா. இதேபோல் டோல்கேட் கட்டணத்தை குறைத்து வசூல் செய்யுங்கள் பார்க்கலாம். அதைச் செய்ய மாட்டார்கள். எதையாவது சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு விட்டார்கள். நீங்களும் ஏமாற்றமடைய தயாராகி விட்டீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இதுதானே நடக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

The post மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்தால் சமையல் சிலிண்டரின் விலை ரூ.2000 ஆகலாம்:சீமான் appeared first on Dinakaran.

Related Stories: