யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஜெனிபர் பிராடி, டெய்லர் பிரிட்ஸ் வெற்றி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லேவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-3, 5-7, 7-5 என ரஷ்யாவின் எலினா அவனேசியனை வென்றார். அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி, 6-1, 2-6, 6-2 என போலந்தின் மக்டா லினெட்டையும், அமெரிக்காவின் பெர்னார்டா பேரா 3-6, 7-6, 6-2 என சீனாவின் வாங் சியூவையும், சீனாவின் ஜூலின் 6-3, 6-3 என பெலாரசின் விக்டோரியா அசரென்காவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். 11ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 5-7, 6-7 என டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 6-1, 6-2, 6-2 என பெருவின் ஜுவான் பாப்லோ வெரிலாசையும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ 6-3, 6-1, 6-4 என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். நார்வேயின் காஸ்பர் ரூட், 4-6, 7-5, 2-6, 6-0, 2-6 என சீனாவின் ஜாங் ஜிஜெனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டாமிபால் ஆகியோரும் 2வது சுற்றில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

 

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஜெனிபர் பிராடி, டெய்லர் பிரிட்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: