பைக் ரேஸ் வாலிபர்களை மடக்கி கலெக்டர் எச்சரிக்கை பள்ளிகொண்டா டோல்கேட்டில்

பள்ளிகொண்டா, ஆக.31: பள்ளிகொண்டா டோல்கேட்டில் பைக் ரேஸ் வாலிபர்களை மடக்கி கலெக்டர் எச்சரித்து அனுப்பினார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிகுட்பட்ட 2வது வார்டு கோட்டை தெரு, சன்னதி தெருக்களில் அதிகாரிகள் நேற்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக கள ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகள் கள ஆயவினை சரியான முறையில் நடத்துகின்றனரா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக வேலூரில் இருந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளிகொண்டா நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பொய்கை அருகே கலெக்டரின் வாகனத்தை கடந்து, ஹெல்மெட் அணியாமல் 2 வாலிபர்கள் பைக்கில் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசாருக்கு சம்பந்தப்பட்ட பைக் எண்ணை தெரிவித்து தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அங்கு வந்த கலெக்டர் வாலிபர்களை எச்சரித்து, ‘இனி இதுபோன்று விபத்தில் சிக்கும் வகையில் பைக் ரேஸ் செல்லக்கூடாது. ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பைக் ஓட்ட வேண்டும்’ என அறிவுரைகளை கூறி அனுப்பினார்.

The post பைக் ரேஸ் வாலிபர்களை மடக்கி கலெக்டர் எச்சரிக்கை பள்ளிகொண்டா டோல்கேட்டில் appeared first on Dinakaran.

Related Stories: