அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே, வங்கி போன்ற அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து வருவதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.இதுவரை தமிழகம் முழுவதும் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளரான தஞ்சையை சேர்ந்த சேஷாத்திரி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிநாத், தலைமை செயலக ஊழியர் கண்ணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பரிதி இளம் வழுதியின் 3வது மனைவி ராணி எலிசபெத் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.                      …

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: