சரித்திரம் படைத்து இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்: தங்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சரித்திரம் படைத்து இந்தியாவை பெருமைப்படுத்துங்கள் என்று உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக முதல் தங்கத்தை வென்றதில் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அற்புதமான சாதனைகள் இந்திய விளையாட்டுகளை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளன்று இந்தியா சார்பில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, டிபி மானு மற்றும் கிஷோர் ஜேனா பங்கேற்றனர்.

25 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (2023) பங்கேற்று, முதல் சுற்றில் 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து, பட்டியலில் முதலிடம் பிடித்தார். மூன்றாவது வாய்ப்பில் 86.32 மீட்டர் தூரமும், நான்காவது வாய்ப்பில் 84.64 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் 87.73 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 83.98 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து நான்காவது வாய்ப்பில் 87.15 மீட்டர் தூரமும் வீசிய அவர், ஐந்தாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். கடைசி வாய்ப்பில் 81.36 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.

 

The post சரித்திரம் படைத்து இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்: தங்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: