திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப திருவிழா

 

தஞ்சாவூர், ஆக. 28: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் அமர்ந்து 5 சுற்றுகள் வந்தபிறகு குளத்தின் நடுமண்டபத்தில் சாமி இறக்கிவைத்து ஊஞ்சலில் வைத்து ஆராட்டி தீபாரதனை நடைபெற்றது.
பிறகு தெப்பத்தில் சுவாமி அமர்ந்து இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர் தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: