கிளீவ்லேண்டு டென்னிஸ் சாரா சொரிபஸ் சாம்பியன்

கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் நடைபெற்ற மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சொரிபஸ் தொர்மோ சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை இகடெரினா அலெக்சாண்ட்ரோவா (28 வயது, 22வது ரேங்க்) உடன் மோதிய சாரா தொர்மோ (26 வயது, 48வது ரேங்க்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய அவர், அடுத்த 2 செட்டிலும் அலெக்சாண்ட்ரோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்தது. இது சாரா வென்ற 2வது டபுள்யு.டி.ஏ பட்டமாகும். தகுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினாலும், அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலமாக பிரதான சுற்றில் களமிறங்க அனுமதிக்கப்பட்ட சாரா கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. டபுள்யு.டி.ஏ வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது வீராங்கனை என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது.

The post கிளீவ்லேண்டு டென்னிஸ் சாரா சொரிபஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: