சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் மாவட்ட நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்: 21 முக்கிய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: சென்னை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை காவல் எல்லைக்குள் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்து வைத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், பல்வேறு அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் தலைமையில் நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வேப்பேரி, சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, கடலோர பதுகாப்பு குழுமம், சென்னை துறைமுகம், பொது சுகாதாரத்துறை, தெற்கு ரயில்வே துறை, தொலை தொடர்பு துறை, பொதுப்பணித்துறை, சென்னை போக்குவரத்து துறை, கமாண்டோ படை உள்ளிட்ட 21 முக்கிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சென்னை: சென்னை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் ேநற்று நடைபெற்றது. சென்னை காவல் எல்லைக்குள் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்து வைத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், பல்வேறு அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் தலைமையில் நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வேப்பேரி, சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, கடலோர பதுகாப்பு குழுமம், சென்னை துறைமுகம், பொது சுகாதாரத்துறை, தெற்கு ரயில்வே துறை, தொலை தொடர்பு துறை, பொதுப்பணித்துறை, சென்னை போக்குவரத்து துறை, கமாண்டோ படை உள்ளிட்ட 21 முக்கிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் மாவட்ட நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்: 21 முக்கிய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: