பரமக்குடியில் அலங்கார மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்

பரமக்குடி, ஆக.22: பரமக்குடி புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் நவநாள் திருப்பலி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை திருப்பலி துவங்கி வலம் வந்தனர். தொடர்ந்து அலங்கார மாதா கொடி வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் வட்டார அதிபர் சிங்கராயர் கொடியை ஏற்றி வைத்தார். பங்கு பணியாளர் திரவியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஆக.26 மாலை 6 மணிக்கு அன்னையின் திருத்திருப்பவனி நடக்க உள்ளது. மறுநாள் காலை 10.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். பங்கு பணியாளர்கள், அமலவை அருள் சகோதரிகள், அன்பியங்கள், பக்த அவைகள், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடியில் அலங்கார மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: