சின்சினாட்டி ஓபன் காலிறுதியில் இகா

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ஸ் & சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். காலுறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் (20 வயது, 24வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (22வது வயது, போலந்து) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

முன்னணி வீராங்கனைகள் அரினா சபலெங்கா (பெலாரஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), மேரி பவுஸ்கோவா, கரோலினா முச்சோவா, மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.), கோகோ காஃப் (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட ஜோகோவிச் (செர்பியா), அல்கரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

The post சின்சினாட்டி ஓபன் காலிறுதியில் இகா appeared first on Dinakaran.

Related Stories: