கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றமில்லை: வதந்தியை நம்பவேண்டாம் என அதிகாரிகள் தகவல்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்படாது. வதந்தியை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்போவதாக வெளியாகியுள்ள தகவல் வெறும் வதந்தி. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படவேண்டாம். கோயம்பேடு மார்க்கெட் பற்றி அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு நேரில் வந்து உங்கள் சந்தேகத்தை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கோயம்பேடு மார்க்கெட் அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறும்போது, “கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் வியாபாரிகள், பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை கடும் முயற்சியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தோம். கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றவேண்டும் என்றால், தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகத்தில் இருந்து நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் இதுவரை தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்போவதாக கூறப்படும் வதந்தியை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நம்பவேண்டாம்” என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றமில்லை: வதந்தியை நம்பவேண்டாம் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: