மங்கனூர் ஊராட்சியில் கொத்தமல்லி விவசாயம் படுஜோர்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மங்கனூர் ஊராட்சியில் பலதரபட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் தற்சமயம் வசந்தா பழனியாண்டி என்ற விவசாயி கொத்தமல்லி விவசாயம் செய்து உள்ளார்.

இவர் கூறுகையில் கொத்தமல்லி விதை அரியலூர் பகுதியில் இருந்து வாங்கி வரபட்டது. முழு மல்லியை உடைந்து விதை நெயர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தில் மேல்பரப்பில் விதை இருக்கும்படி விதைக்க வேண்டும். ஈரபாதம் அதிக அளவில் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிக வெப்பம் இல்லாத பகுதியாக இருந்தால் மகசூல் நிறைய கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்.

மேலும் நிலத்தில் நீர் வடிகால் வசதி முறையாக செய்துகொள்ள வேண்டும் மல்லி சாகுபடி பொருந்தவரை வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் பருவநிலை ஏற்றது என்று கூறுகிறார்கள். மல்லி விதைந்த நாட்களில் இருந்து 30 தினங்கள் முதல் 40 தினங்களில் முதல் சாகுபடி எடுக்கலாம்.

பின்பு மல்லி விதைகள் காய்க்க தொடங்கும் என கூறுகிறார்கள். மல்லி தேறியவுடன் செடிகளை பறிந்து இயந்திரங்களை கொண்டு மல்லி விதைகளை பிரிந்து எடுக்கலாம் என்று தெரிவித்தார். மல்லி என்பது ஒருவித நாட்டு மருந்தாகவும் உள்ளது.

கொத்தமல்லி விதைகள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நிரழிவு நோய் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும் எனவும், ஆண், பெண் இருபாலர்களுக்கும் சிறுநீர் பாதை தொற்றுநோயை குணபடுத்தும் மேலும் சரும நோய் பிரச்சனைகளை தடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் போது மல்லியை தண்ணீரில் கொதிக்கவைத்து சிறிது பனைவெல்லம் சேர்த்து இளச் சூடாக பருகிவத்தால் குணம் அடையும் என கூறுகிறார்கள்.

இதில் சுண்ணாப்பு சத்து அதிக அளவில் இருப்பதால் எலும்புக்கு வழு சேர்க்கும் என்று வயது முதிர்ந்தவர் கூறுகிறார்கள். தமிழகத்தில் சமையல் பொருள்களில் மல்லி முக்கிய பங்கு பெறுகிறது. மங்கனூர் மல்லிக்கு இப்பகுதியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் தற்சமயம் உற்பத்தி சற்று குறைந்துள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Related Stories: